தமிழ் ஈழத்தீர்வு: இந்தியா சிந்திக்குமா?

திராவிடப் பேரவை, பொதுச்செயலாளர் நா. நந்திவர்மன்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் 4-12-2008 காலை சந்தித்து இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய இந்தியா எல்லா வகையிலும் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டுச் சட்டமன்றமும் ஒருமனதாக போர் நிறுத்தம் ஏற்பட்டாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்திய அரசு இலங்கைக்கு வெளியுறுவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி அவர்களை அனுப்ப இந்திய தலைமை அமைச்சர் இசைந்துள்ளார். இலங்கைக்கு போகிறவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று கண்மூடித்தனமாக இனியும் வற்புறுத்திக் கொண்டிருப்பது அறிவுடைமை அல்ல.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் ஈழச் சிக்கலுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். இந்திய அரசு தொடர்ந்து சொல்லி வரும் நிலைப்பாடு இது. நடைமுறையில் நிறைவேற முடியாத ஒரு நிலையை இந்தியா வலியுறுத்தி வருவது வியப்பளிக்கின்றது. ஒன்று பட்ட இந்தியாவுக்குள் தான் இந்தியாவும் பாகிஸ்தானும் இருக்க வேண்டும். மத அடிப்படையில்இரு நாடுகள் பிரியக் கூடாது என மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவர் பேச்சை யாரும் கேட்க வில்லை. ஒன்றாக இருக்க இயலாத அளவுக்கு இரண்டு மதங்களுக்கிடையே மோதல் முற்றிவிட்டது. எனவே காலத்தின்¢ கட்டாயம் இந்தியா. பாக்கிஸ்தான்¢ என்ற இரண்டு நாடுகள் பிரிந்தன. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதல் இனமோதல் மட்டுமா? தங்களுக்கிடையே ஆன மோதலும் அல்லவா? இந்தியாவும் பாகிஸ்தானும் பின்பற்ற முடியாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வு என்பதை எவ்வாறு ஈழத்தமிழர்களும் சிங்களவர்களும் பின்பற்ற வேண்டுமென இந்தியா எதிர்பார்க்கிறது?

ஒரே மதத்தைப் பின்பற்றிய மேற்குப் பாக்கிஸ்தானும் கிழக்குப் பாகிஸ்தானும் ஒன்று பட்ட நாடாக நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது இதே இந்தியா பாக்கிஸ்தானும் வங்கதேசமும் தனித்தனி நாடுகளாகப் பிரிய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இலங்கையில் மட்டும் ஏன் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வு என வலிந்து இந்தியா திணிக்க முற்படுகிறது? அறிவுத் தௌ¤வுள்ள எந்த அரசியல் நோக்கர்களுக்கும் இந்தியாவின் அணுகுமுறை புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது.

மலேசியக் கூட்டமைப்பில் மக்கள் கருத்துக் கணிப்பு அடிப்படையில் சேர்ந்த சிங்கப்பூர். முரண்பாடுகள் முற்றியதும் பிரிந்தது. சிங்கப்பூரின் லீகுவான்யூ அவர்களும் மலேசிய தொலைநோக்கோடு பிரிந்தார்கள். இன்ற இரண்டு நாடுகளுமே செழிப்பின் உச்சநிலை கண்டுள்ளன. அத்தகைய தொலைநோக்கு இலங்கையை இதுவரை ஆண்ட. இன்று ஆளும் எந்ததத் தலைமையிடமும் இல்லை. அவர்களக்குப் புத்தி புகட்டவும் இந்தியாவுக்கு மனமில்லை.

ஈழத் தமிழர்கள் தனி நாடாக இயங்குவது இயலாது. ஒன்றுபட்ட நாடாக இருந்தே ஆக வேண்டும் என்று வாதடுபவர்கள் பார்வைக்குச் சில புள்ளி விவரங்களை தருகிறேன். உலகில் சின்னஞ்சிறிய நாடுகள் விடுதலை பெற்று வளமுடன் வாழ்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் 12 சிறிய நாடுகள் உள்ளன. இவற்றுள் 5 நாடுகள் தீவுகள் அல்லது தீவுக் கூட்டங்களாகும். வட நண்ணிலக் கடலோர நாடு மொனாக்கோ 500 ஏக்கர் பரபரபளவே உள்ள நாடு ஆகும். 32,000 பேர் வாழும் மொனாக்கோ நாட்டின் குடிமக்கள் 8000 பேர்களே. மொனாக்கோ விடுதலை பெற்றுள்ள நாடு என்றாலும் அதன் அண்டை நாடான பிரான்சு அந்நாட்டு அயலுறவு, தகவல் தொடர்பு, பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பு ஏற்றுப் பார்த்துக் கொள்கிறது. பிரான்சின் நாணயமான பிராங்கு மொனாக்கோ நாட்டு நாணயமாக உள்ளது. பிரான்சு மொனாக்கோவுக்கச் செய்யும் உதவிகளை தமிழ் ஈழத்துக்கு இந்தியா செய்து தமிழ் ஈழத்தின் விடுதலைக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கலாமோ பிரான்சின் முன் நடவடிக்கையை இந்தியா பின்பற்றலாமே.

மொனாக்கோ தவிர 31000 மக்கள் வாழும் லீச்டென் இசுடீன், ஓரளவு தன்னாட்சியுடைய தனிநாடுகளாக 64000 மக்கள் வாழும் அண்டோரா, 24000 மக்கள் வாழும் Êசன்மரினோ, 70,000 மக்கள் வாழும் மேன்தீவுகள், 1,50,000 மக்களுடைய சேனல் தீவுகள் 45,000 பேர் வாழும் டூபெரோ தீவுகள், 29,000 பேர் வாழும் கிப்ரால்டர் போன்ற நாடுகள் தனிநாடுகளாக உள்ளன. தன்னாட்சி ஓரளவு பெற்றுள்ள தனிநாடுகளாகவும் உள்ளன. இந்த நாடுகளைப் போல் பிரான்சும், பிரிட்டனும் எவ்வாறு பேணிப் பாதுகாக்கின்றன? இந்த நாடுகளின் அதிகாரப் பகிர்வு இலங்கைக்கு முன் மாதிரியாக அமையுமா? எந்தப் பேச்சுமில்லை. இந்திய அரசு இந்தத் திசையில் எந்தச் சிந்தனையும் செய்து பார்த்ததாகத் தெரியவில்லை. 109 ஏக்கரில் 900 குடிமக்களுடன் போப் ஆண்டவர் ஆளும் வாடிகன் நகரம் தனிநாடாக விளங்கும் போது தமிழ் ஈழம் தனிநாடாக விளங்க முடியாதா? விளங்கினால் ஐக்கிய நாடுகள் மன்றம் இடம் தராதா?

காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள 53 நாடுகளில்¢ 32 நாடுகள் சிறிய நாடுகள் என்பது அந்தக் கூட்டமைப்பில் இடம பெற்றுள்ள இந்தியாவுக்குத் தெரியாதா? 1.5 மில்லியன் மக்களுக்கும், குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் தனிநாடுகளாகத் தரணியில் வாழ்கின்றன. இவற்றுள்ளும் 50,000 க்கும் குறைவாக மக்கள் வாழும் செயிண்ட்-கிட்சு, நௌரு, நியூ, துவாளு ஆகிய நாடுகளும் அடங்கும்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உலக வங்கிக் கணக்குப்படி 12 சிறிய நாடுகள் உள்ளன. கேப் வெர்தி (4,16,000) சாஓதோம் (1,42,000) ழிபூதி (6,36,000), சுவாசிலாந்து (9,69,000), சியூட்டா (69,000) மெல்லிகா (60,000) ஆகிய நாடுகள் பட்டியல் பார்த்தால் தமிழ் ஈழம் தனி நாடாவது உலக இயற்கைத்தான். ஐரோப்பிய ஒன்றியம் முதல் ஆப்பிரிக்கக் கண்டம் வரை இத்தனை சின்னஞ்சிறு நாடுகள் விடுதலையுடன் வாழும் போது தமிழ் ஈழ விடுதலையும் உலகத்தோடு ஒட்ட ஒழுகும் நடைமுறைதான் என்பது ஏன் இன்னமும் இந்திய ஆட்சியாளர்களுக்கு புரியாத புதிராக உள்ளது? புரிய வில்லை. பொருத்தமான காரணமும் இல்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல இந்தியா ஒன்றுபட்ட நாட்டுக்குள் தான் ஈழத்தமிழன் உரிமை அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருப்பது பயனற்றது. ஒன்று பட்ட இந்தியாவுக்குள் மாநிலங்கள் பெற்றுள்ள உரிமைகள் மட்டுமே ஈழத்ததமிழர்களுக்குப் போது மானது என்ற தவறான கண்ணோட்டம் இந்தியாவுக்கு உள்ளது. வாதத்துக்காகவே இந்திய மாநிலங்களுக்கள்ள உரிமைகள் மட்டுமே தமிழ் ஈழ மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றால், சரி, ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் தமிழ் ஈழத்தை 28 வது மாநிலமாகச் சேர்த்து அந்த உரிமையுடன் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்குங்கள், சிங்களம் தனி நாடாகவே சிங்கள ஆட்சியின் கீழ் நடக்கட்டும்.

ஒன்று பட்ட நாட்டுக்குள் சிக்கல் வந்தபோது உலகில் வேறு நாடுகளும் தீர்வு கண்டுள்ளன. கியூபெக் தனிநாடு கோரிக்கைக்கு கனடா கண்டதீர்வு, அயர்லாநது¢ விடுதலைக் கோரிக்கைக்கு பிரிட்டன் கண்டதீர்வு, வேல்சு பகுதி மக்கள் உரிமைக்குரலுக்கு பிரிட்டன் கண்டதீர்வு, வேல்சு பகுதி மக்கள் உரிமைக்குரலுக்கு பிரிட்டன் கண்டதீர்வு என எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளன, இவற்றில் ஒன்றைக் கூடப் பரிசீலிக்காமல், ஒன்றுபட்ட சிங்கள ஆடசியிடம் அடிமைகளாக தமிழர்களே உழலுங்கள் என இந்தியா சொல்லலாமா? கூட்டுக்குடும்பத்தில் சண்டை வந்தால் சொத்துப் பிரிவினை கூடாது என்று இந்தியச் சட்டங்களை இந்திய அருசு மாற்றுமா? கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு? பெறக்வடாது ஒன்றுபட்ட குடும்பமாகவே வாழ வேண்டும் என்று இந்தியச் சட்டங்களில் திருத்தங்கள் வருமா? இதைப் போலத் தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று இந்தியா கூறுவது பொருத்தமற்றது. இந்தியாவைச் சிந்திக்கச் செய்வோம்.